டோனால்ட் டிரம்ப் ஆதரவு – கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்திற்கு எதிராக வலுத்து வரும் போராட்டம்

protest

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் லிபரல் அரசாங்கத்தின் covid-19 தடுப்பூசி ஆணைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிவளைத்தனர். மேலும் எதிர்ப்பாளர்கள் லாரிகளை குவித்ததால் ஒட்டாவா டவுன்டவுன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிலர் தேசிய நினைவிடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு சென்றனர். தெரியாத சிப்பாயின் கல்லறையில் நடனமாடுவது , கடுமையான வார்த்தைகளை கொண்ட பதாகைகளை ஏந்திச் செல்வது மற்றும் இனவாத அடிப்படையில் கொடிகளை பறக்க விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களின் மோசமான நடவடிக்கைகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் .வெள்ளை மேலாதிக்க கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் உட்பட covid-19 தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக FREEDOM CONVOY போராட்டத்தில் பேரணியாக திரண்டுள்ளனர்.

போராட்டக்காரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னால் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார். மேலும் உலகின் பிரபலமான நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே போராட்டம் வலுப்பெற்றது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எடுக்கப்பட்ட covid-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவு கிடைத்ததைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது வீட்டை விட்டு வெளியேறி ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டனர். தற்போது பிரதமர் உடல் நலமாக இருப்பதாகவும் தொலைதூரத்திலிருந்து பணிபுரிவதாகவும் கூறினார்.