12,349 கி.மீ. அசராத பயணம் – வேடந்தாங்கலுக்கு செல்லும் கனடா பறவைகள் எவை தெரியுமா?

இந்திய நாட்டின் மிகவும் பழமையான பறவைகள் சரணாலயம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கலில் உள்ளது. தமிழகத்திலேயே பெரிய சரணாலயம் என்ற சிறப்பை பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் மொத்தம் 26 வகையான வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கும். இங்கு வேடந்தாங்கல் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பு 40 ஹெக்டேர் ஆகும்.

வேடந்தாங்கலுக்கு எப்போதும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் வெளிநாட்டு செல்வது வழக்கம்.

கடந்த 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பறவைகளை வேட்டையாடி பொழுதை கழிப்பதற்காக இந்த இடத்தை பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஊருக்கு வேடர்களின் கிராமம் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னர் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1797- ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து அறிவித்தார்.

கனடாவின் சட்பரி நகரத்துக்கும், தேனி மாவட்டத்துக்கும் என்ன தொடர்பு?

இந்த வேடந்தாங்கல் ஏரி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளதால் இங்கு எவ்வித இடையூறும் இன்று முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக ஏராளமான பறவைகள் வருகின்றன. கனடா, சைபீரியா, வங்கதேசம், பர்மா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரும்.

வேடந்தாங்கல் ஏரியில் உள்ள மரங்களில் கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, வாத்துகள், தட்டவாயன், பச்சைக்காலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான், உண்ணிக்கொக்கு, சிறுவெண் கொக்கு, சிறிய நீர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு எனப்படும் மடையான், நத்தைகுத்தி நாரை, முக்குளிப்பான், கொண்டை நீர்க்காகம் வக்கா ஆகிய பறவைகள் வரும்.

குறிப்பாக நமது கனடாவில் இருந்து கார்கனேய்ஸ் மற்றும் டீல்ஸ் ஆகிய இரு வகை பறவைகள் தான் வேடந்தாங்கலுக்கு செல்கின்றன.

Garganeys
Garganeys

கிட்டத்தட்ட 12,349 கி.மீ. பயணம் செய்து இவர் வேடந்தாங்கலை அடைகின்றன.

Teals
Teals

அதுவும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் திசையை சரியாக கணித்து இவை செல்கின்றன.

Canadian immigration in 2020: கனடாவில் குடியுரிமை வாங்குவது குறித்து ‘புத்தாண்டு 2020’ என்ன சொல்கிறது தெரியுமா?

இந்த பறவைகளின் எச்சம் வயல்வெளிகளுக்கு இயற்கை உரமாக இருக்கும் என மக்கள் கருதுகின்றனர். அதனால் நம் நாட்டுக்கு விருந்தாளியாக வரும் அந்த பறவைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க பட்டாசு வெடிப்பதையே வேடந்தாங்கல் பகுதி மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்த புத்தாண்டுக்கு கூட வேடந்தாங்கல் பகுதியில் பட்டாசு ஏதும் வெடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.