கனடாவில் டெல்டா மாறுபாடு – 2.3 மில்லியன் பைசர் தடுப்பூசி மருந்துகள் எதிர்பார்ப்பு

டெல்டா மாறுபாட்டின் நான்காவது அலை :

  • கனடாவில் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள covid-19 தடுப்பூசி மருந்துகளை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மாடர்னா, அஸ்ட்ரா ஜெனகா மற்றும் பைசர் பயோ டெக் ஆகிய தடுப்பூசி மருந்துகள் கனடிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
  • கனடாவின் பொது சுகாதார அதிகாரிகள் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை எதிர்கொள்வதற்கு அனைத்து கனடிய மக்களும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளனர்.
  • 2.3 மில்லியன் பைசர் பயோடெக் covid-19 தடுப்பூசி மருந்துகளை இந்த வாரத்திற்குள் பெற்றுக் கொள்ளும் என்று கனடிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதிகரிக்கப்படும் தடுப்பூசி விகிதங்கள் ;

  • கனடா சுமார் 66 மில்லியனுக்கும் மேற்பட்ட covid-19 தடுப்பூசி மருந்துகளை பெற்றுள்ளது. பெறப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து அளவுகள் கனடிய மக்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்த போதுமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.
  • கனடாவின் மத்திய அரசு புள்ளிவிவர தகவலின்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 6.7 மில்லியனுக்கும் அதிகமான covid-19 தடுப்பூசி மருந்துகளை தக்க வைத்துள்ளது .மருத்துவர்கள் தடுப்பூசி விகிதங்களை உயர் மட்டத்திற்கு அதிகரிப்பதற்கு முன்பு கனடாவில் உள்ள மாகாணங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை கனடா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவர் தெரசா டாம் தடுப்பூசி விகிதங்களை விரைவில் அதிகரிக்காவிடில் டெல்டா மாறுபாடு தீவிரமாக நான்காவது அலையை கனடாவில் செயல்படுத்த கூடும் என்று வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்