தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கவனத்திற்கு : ஒன்ராரியோ மாகாணத்தில் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள்

vaccine
vaccine tamils
மாகாணம் வழங்கும் தடுப்பூசி சான்றிதழ் :

கனடாவில் covid-19 வைரஸ் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மாகாணங்கள் முழுவதும் பல்வேறு தளர்வுகள் கட்டுப்பாடுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. Covid-19 வைரஸ் தொற்று நான்காவது அலை உருவாகாமல் தடுப்பதற்கு சில துறைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கபடாமல் உள்ளது. இந்நிலையில் ஒன்டாரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்று ஆபத்து நிறைந்த அமைப்புகளை திறப்பதற்கு தடுப்பூசி சான்றிதழ் மூலம் கோரிக்கை வைக்கலாம் என்று மாகாணத்தின் அறிவியல் ஆலோசனை கூறுகிறது.

சுமார் 21 பக்கங்கள் கொண்ட அறிவியல் அட்டவணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. தடுப்பூசி சான்றிதழ்கள் ஒன்ராரியோ மாகாணத்தில் குறிப்பிட்ட காலம் பயன்படுத்தலாம். தடுப்பூசி சான்றிதழ்கள் மீண்டும் திறக்கும் நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களை கண்டறிய சான்றிதழ் :

பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் இயங்குவதற்கு தடுப்பூசி சான்றிதழ்கள் முக்கிய ஆதரவாக அமையும். நோய்த்தடுப்பு நிலையை அறிவிப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி போடப்பட்ட மற்றும் போடப்படாத நபர்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை காண்பிப்பது ஆகும் என்று அறிவியல் இயக்குனர் மருத்துவர் பீட்டர் ஜானி கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புரட்சி மற்றும் போராட்டங்கள் போன்ற கூட்டமாக சேரும் இடங்களில் பங்கேற்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். “மாகாணத்தின் நிலைமை மீண்டும் மோசமாகிவிட்டால் தடுப்பூசி சான்றிதழ்கள் மூலம் விடுதிகள், வணிகங்கள் போன்றவற்றிற்கு பாதுகாப்பான முறையில் இயங்குவதற்கு அனுமதித்து பொருளாதாரத்தையும் சமூகத்தையும் வீழ்ச்சி அடையாமல் பாதுகாப்பதற்கு உதவும் ” என அவர் கூறினார்.

மக்கள் தாங்கள் செலுத்திக் கொள்ள வேண்டிய தடுப்பூசி தவணைகள் குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவிறக்கலாம். ஒன்டாரியோ மாகாணத்தில் தற்போது தடுப்பூசி பெற்றுக் கொண்டவுடன் தடுப்பூசி சான்றிதழ் காகிதங்கள் விநியோகிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்