இத்தனை பேர் Covid-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார்களா? – ஒன்ராறியோவின் தொற்று பாதிப்பு புள்ளி விவரங்கள்

corona cases in canada nearly 10,000 death toll 111 - கனடாவில் கொரோனா பாதிப்பு 10,000 நெருங்கியது - இறந்தவர்கள் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனைகளில் covid-19 வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக சரிவை நோக்கி நகர்கின்றன.

சமீபகாலமாக Covid-19 தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களும் தொற்றிலிருந்து மீண்டு உடல் நலத்துடன் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1000க்கும் குறைவாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் 18 covid-19 உயிரிழப்புகளை ஒன்றாரியோ மாகாணம் உறுதிப்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து ஒண்டாரியோ மாகாணத்தில் செவ்வாயன்று பெரும்பாலான பொதுசுகாதார கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

16 பேர் கடந்த 18 நாட்களில் covid-19 வைரஸ் தொற்றினால் மரணம் அடைந்ததாகவும் ,5 பேர் பிப்ரவரி 27ஆம் தேதியும் ,2 பேர் பிப்ரவரி 26-ம் தேதியும் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 12451 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 914 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்னதாக 1038 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.