கனடாவில் இளம் வயதினரை குறி வைக்கும் உருமாறிய கொரோனா – அதிர்ச்சியில் மாகாண அரசுகள்!

Canada

கனடாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் மூத்த வயதினர் பெரும்பான்மையான மக்களுக்கு செலுத்தி உள்ளது.

இந்த சூழலில் உருமாறிய covid-19 வைரஸ் திரிபுகள் இளம் வயதினருக்கு பரவி வருவதால் அரசாங்கம் தடுப்பூசி மருந்து விநியோகத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ஹெல்த் கனடா வெளியிட்டுள்ள புள்ளியியல் தரவுகள் படி ஏப்ரல் மாதத்தில் மூத்த வயதினர் குறைவான மக்களுக்கே செலுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

60 வயது குறைவானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது போன்றவை குறைந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

முதன்மை பொது சுகாதாரத்துறை அதிகாரி தெரசா டாம் covid-19 தொடக்க காலத்தில் மூத்த வயது உடையவர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அபாயகரமாக இருந்ததாகவும் தற்பொழுது இளம் வயதினர்களிடையே வைரஸ் தொற்று பரவி வருவது நோயிலிருந்து காப்பாற்றுவதற்கு அதிக சிரமம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

உருமாறிய கோவிட் 19 வைரஸ் தொற்று இளம் வயதினர்களிடையே அதிகம் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்று மிக எளிதில் மற்றும் விரைவில் பரவி கொள்ளும் தன்மையுடையதாக இருப்பதால் இளம் வயதினர் பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரப் பட்டியலின் படி தெரியவந்துள்ளது.

பாதிப்படைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் கடந்த வாரம் 13 வயது நிரம்பிய சிறுமி covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.