இன்று கனடாவில் வாழ்கின்ற தமிழர்களுக்கென்றே சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

vaccine
vaccine tamils

கனடாவில் பல்வேறு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கனடாவில் வாழ்கின்ற தமிழர்களுக்கு என கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாம்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

கனடாவில் சுமார் ஒரு மில்லியன் பேர் இதுவரை கரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். கனடாவில் வாழும் தமிழர் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன் அடைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) தமிழர்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமானது ஸ்காபரோ கன்வென்ஷன் மையத்தில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காபரோ சுகாதார அமைச்சகத்தின் கூட்டு நடவடிக்கையாலும் சமூக ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில் வைத்தியர்கள் ஆன பொன் சிவாஜி மற்றும் மயூரி இந்திரா போன்ற முக்கிய மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இந்த முகாமில் 70 வயதிற்கு மேற்பட்டோர் தனக்கான தடுப்பூசி மருந்துகளை தடையின்றிப் பெற்றுக்கொள்ள இயலும் என்பதனையும் தெரிவித்துள்ளனர்.

நேரில் வருகை புரிய முடியாதவர்கள் இணைய முகவரியில் மூலம் தங்களை அணுகலாம் என்றும் அறிவித்துள்ளனர் .ரவிச்சந்திரன், மணிவண்ணன் செல்வநாதன் மற்ற வைத்தியர்களும் சிறப்பு முகாமில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழர்களுக்கான இந்த சிறப்பு முகாமில் கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களும் தவறாது பங்கேற்று பயனடைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.