கொரோனா பாதிப்பால் கனடாவில் 8 ஆயிரத்தை எட்டும் மொத்த உயிரிழப்பு!

corona virus in canada justin trudeau n95 mask covid 19

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. டொராண்டோவை சுற்றியுள்ள பகுதிகளில், நகருக்கு வெளியே, ஒரு சில வணிக நடவடிக்கைகள் இந்த வார வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.

இந்த நிலையில் கொரோனா நாட்டில் வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 7,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 35 பேர் உயிரிழந்ததோடு, 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளில் கனடா 17 ஆவது நாடாக இருப்பதோடு, இதுவரை 96,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 33,409 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 55,000 பேர் பூரண குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,828 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.