மேயர் ஜான் டோரி -“மிகவும் முக்கியமானது ” சி என் கோபுரம் திறப்பு குறித்து அறிவிப்பு

cn tower toronto

பல மாதங்களுக்கு பின்னர் சி என் கோபுரம் திறப்பு :

கனடாவின் டோரன்டோ நகரில் புகழ்பெற்ற சி என் கோபுரம் எங்க மீண்டும் திறக்கப்பட உள்ளது. பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக சி என் கோபுரம் இன்று மீண்டும் திறப்பதால் டொரன்டோ நகரத்திற்கு மீண்டும் பொலிவான அதிர்வுகள் கிடைக்கும் என்று முதல்வர் ஜான் டோரி கூறினார். “இது மிகவும் முக்கியமானது ” என்றும் அவர் கூறினார்.

Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் சி என் கோபுரம் மூடப்பட்டது.தற்போது ஒன்ராரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் மாகாணத்தில் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாவது கட்ட தளர்வுகளில் குறைந்த திறன்கள் உடன்திறக்கப்படவுள்ளது.

நகரத்திற்கு திரும்பும் ப்ளூ ஜெஸ்

டோரன்டோ ப்ளூ ஜேஸ் எதிர்வரும் ஜூலை 30ஆம் தேதி 15000 பார்வையாளர்களுக்கு முன்பாக விளையாடுவதற்கு நகரத்திற்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.பிற சுற்றுலா தளங்களை திறப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே சி என் கோபுரம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றினால் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டவுன் டவுன் நகரிலுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பார்கள் போன்றவை எங்களுக்கு முன்பு உள்ள பொருளாதார சவால்களில் ஒன்றாகும் என முதல்வர் ஜான் டோரி கூறினார்.

வழக்கமாக சி என் கோபுரத்தில் பத்தாயிரம் முதல் 12,000 விருந்தினர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். Covid-19 தொற்று காரணமாக ஒரு நாளைக்கு 2500 அனுமதிச் சீட்டுகளை மட்டுமே விற்பனை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.