கனடிய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் ரகசியமாக சீனா போடும் திட்டம்!

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

சீனாவை உளவு பார்த்தார்கள் என்று இரண்டு ஆண்டுகளாக பிடித்து வைக்கப்பட்ட இரு கனடியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணையில் கலந்து கொண்டு ஆலோசனை செய்வதற்கு அங்கிருக்கும் கனடிய தூதர்களை அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் 2 கனடியர்கள் விடுவிக்கப்படுவார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையானது கனடிய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் ரகசியமாக நடத்தப்படுவது கனேடியர்களிடம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையானது வெளிப்படை இல்லாத நிலையில் ரகசியமாக நடத்தப்படுவது கடும் கண்டனத்திற்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளார்.

சீனாவில் உளவு பார்த்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பிடித்து வைத்திருக்கும் இரண்டு கனடியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கனடிய தூதரக அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

கனடிய தூதரக அதிகாரிகளை வழக்கு விசாரணையில் கலந்து கொள்ள அனுமதி அளித்திருக்க வேண்டும்.

ஆனால் சீன அரசாங்கமும் அதை செய்ய மறுத்துவிட்டது. இவை அனைத்தையும் கண்டித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.