கனடாவில் கொரோனா சிகிச்சைக்காக சென்ற பெண் மருத்துவமனை காவலர்களால் தாக்கப்பட்டு சடலமாக மீட்பு!

Danielle Stephanie
Danielle Stephanie Hospital

கனடாவில் டொரொன்டோ பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சென்ற பெண் மருத்துவமனை காவலர்களால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில்  அவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

43 வயதான Danielle Stephanie சுமார் 11 நாட்கள் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படாமல் மருத்துவமனையில் தனித்து விடப்பட்டுள்ளார். சுயநினைவை இழந்த நிலையில், சம்பவம் நடந்த 16 நாட்களுக்கு பின்னர் மே 27 அன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஸ்டாஃப்வில்லியைச் சேர்ந்த அமண்டா ரோஜாஸ்-சில்வா, 42, மற்றும் ப்ரூகாமைச் சேர்ந்த ஷேன் ஹட்லி (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஓல்ட் சிட்டி ஹாலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கொரோனா சோதனையில் அந்த பெண்ணுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியான பின்னரும், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் இருந்தபடியால் அவர் மே மாதம் 10 ஆம் திகதி பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அந்த மருத்துவமனையின் காத்திருக்கும் அறையில் சுமார் 6.38 மணிக்கு அவரை அணுகியுள்ளனர் சில காவலர்கள்.

அது மட்டுமின்றி, அவரை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.உடல் ரீதியான துன்புறுத்தலும் அளித்துள்ளனர். மட்டுமின்றி முகத்தை சுவற்றில் அழுத்தி துன்புறுத்தியுள்ளனர்.

ஆனால் அதன் பின்னர் கண்காணிப்பு கேமராவில் எதுவும் பதியவில்லை என்றே கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரை சக்கர நாற்காலி ஒன்றில் அமர்த்தி அவரை அங்கிருந்து வெளியேற்றுவது கெமராவில் பதிவாகியுள்ளது.

உடற்கூராய்வில் Danielle Stephanie மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தமது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

இதையும் படியுங்க: கனடா வாழ் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! உதயமாகும் தமிழ் சமூக மையம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.