இராணுவ வீரருக்கு எதிராக 22 பிரிவுகளில் வழக்கு! கனடா பிரதமரின் குடியிருப்புக்குள் நுழைந்த குற்றத்திற்கு தண்டனை உறுதியாகிறதா?

A-military-man-breaches-the-gates-at-Rideau-Hall
cp24

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவ வீரருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 22 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துமீறி நுழைந்தது, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 22 பிரிவுகளில் இராணுவ வீரரான ஹூரன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி:

கனடா தலைநகரான ஒட்டாவாவில் ரைடோ பகுதியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மாகாண ஆளுநர் ஜூலி பேயட் அகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை ஆயுதங்களுடன் காரில் சென்ற இராணுவ வீரரான ஹூரன் நுழைவுவாயில் கதவை உடைத்துக்கொண்டு துப்பாக்கியுடன் பிரதமரின் குடியிருப்பு நோக்கிச் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

விசாரணையில் அவர், Manitoba மாகாணத்தைச் சேர்ந்தவரும் கனேடிய இராணுவத்தில் பணியாற்றிய ஹூரன் என தெரியவந்தது.

இதேவேளை, பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தது தொடர்பாக காவல்துறையினரிடம் கருத்துக்கூற மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைந்து செயல்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுத்ததிற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms