கனடிய பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை – ரஷ்யாவின் நட்பு நாடுகளுக்கு பதிலடி

russia ukraine war

ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து விவாதிக்க உக்ரேனிய ஜனாதிபதி Volodimir கனடாவின் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார் .இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதற்கு உக்ரேனிய அதிபர் பாராளுமன்றத்தில் இன்று மெய்நிகர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்திவரும் ரஷ்யாவிற்கு கனடிய அரசாங்கம் ஏற்கனவே பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. தற்பொழுது ரஷ்யா மட்டுமின்றி ரஷ்யாவுடன் நெருங்கி உறவாடும் நாடுகளுக்கும் பொருளாதார தடைகளை அறிவிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாராளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்களை அடுத்து Zelenskyy உரையாற்றுவார் .பின்னர் செனட் சபையின் சபாநாயகர் மற்றும் அவைத் தலைவர்கள் உரையாற்றுவார்கள். இவர்களைத் தொடர்ந்து பசுமை கட்சியின் உறுப்பினர் மற்றும் மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

பாராளுமன்ற அவையை நடத்துவதற்கான கோரிக்கைக்கு சபாநாயகர் அந்தோணி அனுமதி அளித்தார். மேலும் பாராளுமன்ற கூட்டத்தை மார்ச் 21 வரை நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் சபையில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.