அதிர்ச்சியில் கனேடிய அரசியல் களம் – ஆடையற்ற நிலையில் தோன்றிய பாராளுமன்ற உறுப்பினர்!

canada liberal mp nude
canada liberal mp nude

கனடா லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் மெய்நிகர் காணொளியில் குழுவின் சந்திப்பிற்கு ஆடையற்ற நிலையில் தோன்றியிருக்கிறார்.

இந்த தகவல் தற்பொழுது ஊடக மற்றும் வலைத்தளம் முழுவதிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை அன்று வில்லியம்சன் ஆமோஸ் என்ற பாராளுமன்ற உறுப்பினர் கட்சியின் சந்திப்பின்போது நிர்வாணமாக மெய்நிகர் வாயிலாக பங்கேற்றுள்ளார்.

இவ்வாறு இவர் பங்கேற்ற இந்த வீடியோ பதிவின் ஒரு புகைப்பட கிளிக் கனடிய ஊடகத்தால் எடுக்கப்பட்டது.

அந்த புகைப்படத்தில் ஆமோஸ் கியூபெக் மற்றும் கனடாவின் கொடிகளுக்கு நடுவில் நின்றுள்ளார்.

மேலும் அவரது உறுப்பானது மேஜையால் மறைக்கப்பட்டு இருந்தது.இதேவேளையில் கனடிய ஊடகம் பகுதியளவு கருப்பு நிற கட்டத்தால் மறைத்து வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் குறித்து ஆமோஸ் “இது அறியாது நேர்ந்த பிழை ” என்று கூறியுள்ளார். இதனை இவர் புதன்கிழமை என்று மின்னஞ்சல் வழியாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ ஆனது நான் நடைப்பயிற்சி முடித்து வந்த பின்பு உறுப்பினர் சந்திப்பிற்காக உடையை மாற்றிய பொழுது தற்செயலாக கேமரா ஆன் செய்யப்பட்டுவிட்டது .

இதனால் தான் மிகுந்த மன்னிப்புகளை குழு உறுப்பினர்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் மேலும் தேவையில்லாத இந்த திசை திருப்பத்திற்கு மிகுந்த வருத்தம் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது போன்ற பிழை மீண்டும் ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார். மேலும் ஆமோஸ் கேமரா கருவியை தெளிவாக கையாளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.