கனடாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு – வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் கனடிய நிறுவனங்கள்

job in canada indians

கனடாவில் வணிகம், கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச நாடுகளிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.கனடாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதால் சீனா,ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் மக்கள் குடியேறுகின்றனர். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை கனடா வழங்கிவருகிறது.

Covid-19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கனடாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அதே நேரத்தில் கனடாவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

கனடிய நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாட்டவர்களை காலிப் பணியிடங்களில் நிரப்புகின்றன. கனடாவில் அதிகளவில் காலிப்பணியிடங்கள் இருப்பினும் வேலைக்கு தகுதியானவர்கள் குறைவாகவே இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அதிக அளவில் சேர்க்கிறது .தற்பொழுது கனடாவில் பல்வேறு துறைகளிலும் அதிக காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் அவற்றை நிரப்பும் அளவுக்கு கனடாவில் பணியாளர்கள் இல்லை.

காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு ஒரே வழி அயல் நாட்டவர்களை வேலைக்கு எடுப்பது ஆகும். வெளிநாட்டவர்கள் கனடாவில் வேலை செய்ய வேண்டுமானால் அதற்காக அவர்கள் பணி உரிமம் பெறவேண்டும். மேலும் சில இடங்களில் வேலை வழங்குவோர் LMIA மதிப்பீடு ஒன்றை செய்யவேண்டியிருக்கும். வேலைக்கு தகுதியான வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் ஒரு இனிய செய்தி ஆகும்.