தப்பியவர்களிடம் மன்னிப்பு கேட்கும் ராணுவ தளபதி – பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்தின் நடவடிக்கைகள்

Anita anand appointed as canada minister - கனடாவில் அமைச்சராகி சாதித்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்
Anita anand appointed as canada minister - கனடாவில் அமைச்சராகி சாதித்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்

கனடாவில் இந்த வாரத் தொடக்கத்தில் ராணுவ தளபதி, தேசிய துணை பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் ராணுவத்தின் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பியவர்களிடம் முறைப்படி மன்னிப்பு கேட்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021 ஆம் தேர்தலுக்குப் பின்னர் அக்டோபர் 19ஆம் தேதி கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட அனிதா ஆனந்துக்கு நவம்பர் மாதத்தில் மன்னிப்பு கேட்கப் படும் என்று உள்விவகார அறிக்கைகள் கூறுகின்றன.

ராணுவத்தில் பாலியல் துன்புறுத்தலை நிவர்த்தி செய்வதற்கும் ,பாலின சமத்துவத்தை எதிர்க்கும் நிறுவனத்தின் கலாச்சாரத்தை மாற்றுவதற்கும் எவ்வளவு பணம் செலவழிக்க உள்ளது என்பதை பற்றிய விரிவான தகவல்கள் இந்த மாநாட்டில் அடங்கும்.

நிறுவனத்தின் கலாச்சார மாற்றம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்கான ஆதரவு மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகள் போன்றவற்றிற்கு $77.7 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற லிபரல் கட்சி SMRC அமைப்புகளை மேம்படுத்துவதாக ஆண்டின் தொடக்கத்திலேயே உறுதியளித்துள்ளது. ராணுவத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள $77.7 மில்லியன் டாலர்களில் ,$2.2 மில்லியன் டாலர்கள் மட்டுமே கலாச்சார மாற்றம் தொடர்பான மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ராணுவ நீதி அமைப்பில் பாதிப்படைந்தவர்கள் உரிமைகளை மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு மசோதா C-77 இன் விதிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.