கனடாவில் covid-19 பாதிப்பினால் பலர் உயிருக்கு ஆபத்தான நிலை சிகிச்சை!

canada-watching-covid-19-surge

கனடாவில் தற்பொழுது covid-19 பாதிப்பினால் பலர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடா பொது சுகாதாரத் துறையின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி தெரசா டாம் “தற்பொழுது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க படுபவர்கள் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் தற்போது வரை பதிவாகியுள்ள covid-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளையில் மருத்துவமனையில் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து சாதாரண பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருப்பதாக தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.

முன்பு இருந்த பாதிப்பு சதவீதத்தை விட தற்பொழுது 20% பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Covid-19 தீவிரமாக மக்களிடையே பரவி வருவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மருத்துவமனைகள் முழுவதும் covid-19 நோயாளிகளால் நிரம்பி வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோல் covid-19 எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Covid-19 நோயாளிகள் தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் பலர் சுகமடைந்து வீடு திரும்புவதாகவும் மற்றும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் அனுமதிக்கபடுவதால் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்றும் முன் களப்பணியாளர்கள் தேவை அதிகரித்துள்ளது.