ஆளும் கட்சியாக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கனடா எதிர்கட்சி கேள்வி!

trudeau
Generations of Asian Canadians helped build Canada

இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை ஐநா சபையில்  அனைவரும் நாடுகளும் முன்வைத்துள்ளன.

இந்நிலையில் இலங்கை மீது சுயசார்பு ,சர்வதேச விசாரணை போன்றவற்றை கோரிக்கை விடுப்பதற்கு தற்போதைய கனடா அரசாங்கம் தவறவிட்டு உள்ளதாக எதிர்க் கட்சி ஆகிய கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.

மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெளியுறவுத்துறை பொறுப்பாளர் மைக்கேல் சாங் மற்றும் சர்வதேச அபிவிருத்தி மனித உரிமைகளின் பொறுப்பாளர் கார்னர் ஜீனியஸ் போன்றோர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை கனடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சி ஆகிய கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைத் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்பொழுது ஆளும் கட்சியாக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன் என்று கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இனவெறி தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக சர்வதேச விசாரணைகளை கொண்டுவரவேண்டும் என்றும் மேலும் இந்த வகையான நிகழ்வு தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.