கனடா ஏழை நாடுகளுக்கு உதவ மறுக்கிறதா? – கனடிய அரசாங்கத்திடம் இன்னும் வெளிப்படைத்தன்மை தேவை என்று கூறும் வழக்கறிஞர்கள்

vaccine

கனடாவின் வாக்குறுதிகள் மற்றும் அதிகப்படியாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கைகளில் இன்னும் வெளிப்படைத்தன்மை தேவை என்று கனடிய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசி சரக்குகளின் இலக்கு நான்கு மில்லியன்கள் ஆகும். ஆனால் சமீபத்திய மாதங்களில் அரசாங்கத்திடம் 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக பகுப்பாய்வுகள் கூறுகின்றன.

Covid-19 வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக போராடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்வேறு நாடுகளும் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன கனடாவில் பூஸ்டர் தடுப்பூசி மருந்துகளுக்கான அவசியம் இல்லாதபோது தடுப்பூசிகளுக்கு சிரமப்படும் நாடுகளுக்கு தானம் வழங்காமல் இருப்பு வைத்திருந்தது புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது என்று உலகளாவிய தடுப்பூசி சமபங்கு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடைக்காலத்தில் கனடியர்கள் தடுப்பூசி மருந்துகளை அணுகுவதற்கு 4 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை இருப்பு வைத்திருந்ததாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி சரக்குகள் தேவைக்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தால் மற்ற நாடுகளுக்கு நன்கொடை அளிக்கப்படும்.

கனடாவின் மத்திய மற்றும் மாகாண இருப்புகளில் 16 மில்லியன் தடுப்பூசி மருந்து அளவுகள் இருப்பதாக புதன்கிழமை அன்று சுகாதார அமைச்சர் ஜூன் யவ்ஸ் டக்லஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கனடா தேவைக்கு அதிகமாக தடுப்பூசி மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்வது உலகளாவிய தடுப்பூசி சமத்துவமின்மையை சுட்டிக்காட்டுவதாக அமையும் என்று கருத்துக்கள் வெளிவந்துள்ளன.