கனடாவில் மக்கள் தொகையைவிட கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சவாலை சந்திக்கும் கியூபெக்

emissions canada qubec

கனடாவில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் என்று வரும்போது கியூபெக் மாகாணம் சற்று தடுமாறுகிறது என்று கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கியூபெக் மாகாணத்தில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக கியூபெக் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய ஆண்டு புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

புள்ளிவிவரங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுதலின் சதவீதம் உயர்ந்துள்ளதால் கியூபெக் மாகாணத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பெனாயிட் சாரட் ,2018 ஆம் ஆண்டு தனது அரசாங்கம் தொடங்குவதற்கு முன்பு அதிகாரத்திலிருந்த அமைச்சர்களின் திட்டங்கள் மீது பழி சுமத்த முற்பட்டார்.கியூபெக் மாகாணத்தின் காஸ்பே பகுதியிலுள்ள சிமெண்ட் தொழிற்சாலையை மாசுபடுதலுக்கு காரணமாக சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான சவால் மிகப் பெரியது என்றும், இச்சமயத்தில் நாங்கள் உண்மையை சொல்லவேண்டும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சாரெட் புதன்கிழமை செய்தி மாநாட்டில் கூறினார். மேலும் அவர் முன்னோக்கிய பணியின் மகத்துவத்தை ஒப்புக்கொண்டார்.

நான்கு சக்கர வாகனங்களான கார்கள் மற்றும் லாரிகள் ஏற்படுத்துகின்ற அதிக அளவிலான உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான போதுமான நடவடிக்கைகள் செய்யப்படவில்லை என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடா முழுவதும் அதிக உமிழ்வு ஏற்படுவதற்கு காரணம் மக்கள் அனைவரும் அதிக அளவில் கார்களை வாங்குவதே ஆகும். மக்கள் தொகையைவிட கார்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக கூறுகின்றனர். 2019 ஆம் ஆண்டில் கனடாவின் மொத்த உமிழ்வுகள் 0.2% அதிகரித்திருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.