கனடாவில் வேலை வாய்ப்புடன் நிரந்தர குடியுரிமை – குடியேற விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்படும்

Canadian work permit
Canadian work permit

Covid-19 மற்றும் அதன் உருமாறிய வைரஸ் மாறுபாடுகள் அச்சுறுத்தி வந்ததால் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான விமான சேவை தடை செய்யப்பட்டிருந்தது. Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி விகிதம் அதிகரித்து Covid-19 வழக்குகள் சரிவை நோக்கி நகர்ந்ததை தொடர்ந்து நாடுகளுக்கிடையேயான விமானசேவை கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இயக்கப்பட்டது.

covid-19 பரவலின் போது கனடாவில் நிரந்தர குடியுரிமை வேண்டி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்க படாமல் உள்ளது. வைரஸ் தொற்று காரணமாக விண்ணப்பங்கள் செயல்படுத்தப்படாமல் குவிந்துள்ள நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவிலான புலம்பெயர்பவர்களை அனுமதிக்க உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

இதுவரை வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்தல் இருக்கும் என்று கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் 431645 பேருக்கும் ,2023 ஆம் ஆண்டில் 4,47,055 பேருக்கும் ,2024 ஆம் ஆண்டில் 4,51000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு கனடா திட்டமிட்டுள்ளதாக புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார்.

கனடாவின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்ப வேண்டியிருப்பதாக Fraser தெரிவித்தார். கனடாவின் சுகாதார அமைப்பு, கல்வி, சமூக சேவை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அதிக அளவிலான பணியாளர்கள் தேவைப்படுவதால் அதிக குடும்பங்கள் கனடாவிற்கு குடியேற வேண்டும் என்று Fraser தெரிவித்தார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் ,கனடாவிற்கு புதிதாக குடியேறியவர்களின் எண்ணிக்கை கனடாவின் மக்கள்தொகையில் ஒரு சதவீதம் அளவுக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.