கனடாவில் பழங்குடி மக்களின் பழமைவாய்ந்த கத்தி கண்டறியப்பட்டது – 4000 ஆண்டுகள் பழமை

ancient stuff

கனடாவின் பாராளுமன்ற சென்ட்ரல் பிளாக் கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது மிகவும் பழமை வாய்ந்த பழங்குடி மக்களின் கல்லாலான கத்தி கண்டறியப்பட்டுள்ளது.ஒட்டாவாவில் பாராளுமன்றத்தில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கத்தி அப்பகுதியில் வாழும் அல்கொன்குயின் மக்களின் கட்டுப்பாட்டிற்கு திரும்பக் கொடுக்கப்பட்டது.

கல் கத்தி கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதாகவும் கூறினர் .

பழங்கால கத்தியானது சுமார் இரண்டரை அங்குலம் நீளம் உடையதாகும். மேலும் அதன் தலைப்பகுதி மிக கூர்மையாகவும் ,கத்தியில் கைப்பிடி இருந்ததாகவும் கூறுகின்றனர்.
சென்டர் பிளாக் புனரமைப்பு பணிகள் நிறைவடையும்போது கல்லாலான கத்தியை பாராளுமன்ற மலையில் காண்பிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கிட்டிகன் சிபி அனுசிநாபக் கவுன்சில் உறுப்பினர் டக் ஓட்ஜிக் “அதுவரை கலைப் பொருளான கல் கத்தியை பழங்குடி சமூகங்கள் உட்பட பள்ளிகள் போன்றவற்றிற்கு காட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பழங்கால கத்தியின் கூட்டு உரிமையை சமூகங்களுக்கு மாற்றுவது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாக கனடாவின் கொள்முதல் மற்றும் பொது சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற மலையில் மட்பாண்ட துண்டுகள், சங்குகள் மற்றும் மணிகள் போன்றவை 1990களில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

கல் கத்தியை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் வைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பழங்கால கத்தியை பகிர உள்ள இரண்டு நாடுகளும் மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஓட்ஜிக் கூறினார் .