கனடா தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க தினம்- வியாழக்கிழமை விடுமுறை

canada reconciliation
reconciliation day holiday

கனடா தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க தினமான செப்டம்பர் 30 ஆம் தேதியை முதல்முறையாக அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கிறது. சட்டப்பூர்வமாக விடுமுறையை அங்கீகரித்தாலும் ஒன்ராரியோ மாகாணத்தில் சட்டப்பூர்வமான விடுமுறை தினமாக இருக்காது. இருப்பினும் ஒன்டாரியோவின் ஓரிரு வணிகங்கள் மூடப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

கனடா தொழிலாளர் குறியீட்டின் கீழ் இயங்கி வரும் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் கனடா தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க தினத்திற்கான விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படும்.ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள மத்திய பொது சேவை ஊழியர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 30-ஆம் தேதி விடுமுறை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

திறந்து இருக்கும் வணிகங்கள் :

கிரேட்டர் டொரன்டோ பகுதியில் உள்ள சில வணிக வளாகங்கள் நேர கட்டுப்பாடுகளுடன் வியாழக்கிழமை திறந்திருக்கும். Eaton Centre, Yorkdale centre, Vaughan mills,Scarborough Town centre மற்றும் Fairview Mall ஆகிய வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

GO Transit மற்றும் TTC போன்ற போக்குவரத்து நிறுவனங்கள் சாதாரண அட்டவணையின் அடிப்படையில் இயங்கும். TTC பணி புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வியாழக்கிழமை ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆரஞ்சு நிற கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்று Ctv news டொரன்டோவிடம் TTC ன் செய்தி தொடர்பாளர் கூறினார்.

நூலகங்கள் மற்றும் அனைத்து LCBO சில்லறை விற்பனையாளர்களும் நண்பகல் 12:00 மணிக்கு திறக்கலாம். CN கோபுரம் போன்ற பெரும்பாலான சுற்றுலா தளங்கள் வியாழக்கிழமை திறக்கப்படும். ஒன்ராரியோ மாகாணத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வியாழக்கிழமை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.