கனடா முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணியில் கனடிய படைகள் தீவிரம்!

Ontario
Officials reported 112 new COVID-19 cases in Ontario on Tuesday, bringing the province's total to 23,500 cases since the outbreak began in late January. (Craig Chivers/CBC)

கனடாவின் அனைத்து மாகாணங்கள் முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணியில் கனடிய படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மணிடோபா போன்ற நகரங்களில் தடுப்பூசி விநியோகித்தல் மட்டுமில்லாது தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளிலும் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மணிடோபா போன்ற நகரங்களில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளுக்கு பொது சுகாதார பணியாளர்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காகவே கனடிய படைகள் அதிரடியாக களம் இறங்கியுள்ளன.

தற்பொழுது மணிடோபா போன்ற பகுதிகளில் 65 வயது மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துவதற்கு கனடிய அரசாங்கம் அனுமதித்து உள்ளது.

கனடிய அரசாங்கம் தடுப்பூசி மருந்துகளை விரைவில் வினியோகிக்க கனேடியப் படைகள் இவ்வாறு பணியில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக கனடிய அரசாங்கம் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுதல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்குமாறு கனடா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி மருந்துகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்கின்றனர் என்பது முக்கிய வழிமுறையாகும்.