ஓமிக்ரோன் மாறுபாட்டினால் கனடாவில் இவ்வளவு வேலை இழப்புகளா?- அதிர்ச்சியடைந்த பொருளாதார நிபுணர்கள்

கனடாவில் covid-19 வைரஸ் தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றது. ஊரடங்கு அறிவிப்பின் போது பலர் தங்களது வேலையை இழந்தனர். கனடிய பொருளாதாரத்தில் covid-19 வைரஸ் தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் ஓமிக்ரோன் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

கனடாவின் புள்ளிவிவரங்களின்படி , கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200000 வேலைகளை இழந்துள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு பரவலினால் செய்யப்பட்ட பணி நிறுத்தம் பல வணிகங்கள் மற்றும் கடைகளை மூடுவதற்கு வழிவகுத்தது.இதனால் வேலையின்மை அரை சதவீதம் உயர்ந்து 6.5% சதவீதமாக உள்ளது.

கியூபெக் மற்றும் ஒண்டாரியோ ஆகிய மாகாணங்களில் பெரும்பாலான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரு மாகாணங்களிலும் ஓமிக்ரோன் வைரஸ் தொற்று அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக இரண்டு மாகாணங்களின் அரசாங்கங்களும் பூட்டுதலை அறிவித்தது .

பல்வேறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலைநிறுத்தம் செய்யப்பட்டதால் பெரும்பாலானோரும் வேலையை இழக்க நேர்ந்தது. சில்லறை வணிகம் பாதிப்படைந்தது. இதனால் 26000 தொழிலாளர்களை இழந்தது .மாதத்தில் 113000 வேலைகளை இழந்தனர்.

பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக வேலையின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.மொத்த ஊழியர்களில் 10% பேர் நோய்த்தொற்று அல்லது இயலாமை காரணமாக தங்களது வேலையை செய்யவில்லை என்று புள்ளிவிவரங்கள் கனடா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்