அவசரக்கால நிலை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்த கனடா மாகாணம்.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

lockdown
corona case canada

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அவசரநிலை மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டக் ஃபோர்ட் தலைமையிலான அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகள், வருகின்ற ஜூன் 30 ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்பதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தே தற்போது மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்படுத்த அவசரகால உத்தரவுகளை ஒன்றாரியோ அரசு நீடித்துள்ளது.

அவசரகால உத்தரவுகளை நீடிப்பதோடு மட்டுமல்லாமல், உட்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான சில கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் மாகாண அரசு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms