கனடா இந்தியாவிற்கு இடையே நேரடி விமான சேவைகள் தொடக்கம் – பயணிகள் மகிழ்ச்சி

Air-India-787-Dreamlin

இந்தியாவிலிருந்து நேரடி விமானங்களை செப்டம்பர் 27ஆம் தேதி முதல் கனடா அனுமதிக்கும் என்று அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் கனடாவிலுள்ள வான்கூவர் மற்றும் டொரன்டோ ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கும் இடைவிடாத சேவைகள் வழங்கப்படும். முதலில் தலைநகர் டெல்லியிலிருந்து சேவைகளை தொடங்குவார்கள்.

கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தின் விமானங்களும் வழித்தடங்களில் இடைவிடாது பறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலிருந்து கனடாவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் கனடிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் ஜென்ட்ஸ்ட்ரீங்ஸ் ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருந்து புறப்படுவதற்கு முன்பு 18 மணி நேரத்திற்குள் எதிர்மறையான covid-19 முடிவுகளை பெற்றிருக்கவேண்டும்.

ஆய்வகத்தில் வழங்கப்பட்ட covid-19 பரிசோதனை முடிவிற்கான QR குறியீட்டைக் கொண்ட சோதனை அறிக்கையை விமான நிறுவனத்தின் ஏர் ஆபரேட்டருக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன் அளிக்க வேண்டும் .

ஏற்கனவே, Covid-19 பரிசோதனை செய்யப்பட்டு நேர்மறையான முடிவுகளை பெற்ற பயணிகள் இந்தியாவில் சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்தில் வழங்கப்பட்ட நேர்மறை சோதனை முடிவுகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவிற்கு புறப்படுவதற்கு 14 முதல் 180 நாட்களுக்கு முன்பாக சோதனை முடிவு அறிக்கைகளை சேகரிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத எந்த ஒரு பயணிகளுக்கும் விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏறுவதற்கு தடைவிதிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையே நேரடியாக விமான சேவை மீண்டும் தொடங்க படுவதால் பயணிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.