கனடா ஜூன் மாத இறுதிக்குள் 4 மில்லியன் தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும்!

vaccine
vaccine tamils

கனடா பைசர் நிறுவனத்திடமிருந்து சுமார் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை ஒவ்வொரு வாரமும் பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

மேலும் பல தடுப்பூசி மருந்துகள் கப்பல் வழியாக அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது. பைபர் மற்றும் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை கனடாவிற்கு வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இடைக்காலத்தில் இருந்து இந்த எண்ணிக்கையிலான தடுப்பூசி மருந்துகள் இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் பெறப்படுவதாக தெரிவித்துள்ளன. இருப்பினும் அடுத்த மாதத்தில் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வாரம் தடுப்பூசி மருந்து வழங்குவதில் முதலாவதாக பைசர் நிறுவனம் அமைந்துள்ளது. அமெரிக்கா தடுப்பூசி மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தற்பொழுது இடைக்கால நிறுத்தம் செய்துள்ளது.

எனவே கனடாவில் அதிக அளவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்து தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக் கொள்ள இயலாது என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார கூட்டாட்சி அமைப்பு மற்றும் கொள்முதல் துறை அமைச்சரும் ஆகிய அனிதா ஆனந்த் வெள்ளிக்கிழமை அன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கனடா ஜூன் மாத இறுதிக்குள் 4 மில்லியன் தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் என்று அனிதா ஆனந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்