கனடாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் தடைகளா? இடையில் நடந்த சிக்கல்!

corona
Canada Corona Vaccine

கனடாவில் அவசரகால ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனடாவிற்கு பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு வழிமுறைகளையும் விதிமுறைகளையும் கனடா அரசு அறிவித்துள்ளது.

சொந்த செலவில் தனிமைப்படுத்த பயணிகளுக்கு வலியுறுத்தல் :

அதாவது கனடாவிற்கு செல்லும் பயணிகள் அனைவரும் மூன்று நாட்களுக்கு தனது சொந்த செலவில் கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இரவு தங்குவதற்கு மட்டுமே பெரும்பான்மையான விடுதிகளில் அதிகமான டாலர்கள் செலவாகும் என்பதால் கனடா அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விடுதிகளில் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது

பாடசாலைகள் திறப்பு :

தற்பொழுது கனடாவில் பனிக்காலம் என்பதால் கொரோனா தொற்றின் அச்சம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் அவசரநிலை ஊரடங்கு அறிவித்துள்ளார்இதன் காரணத்தால் பாடசாலைகள் திறக்கப்படாமல் அனைத்து மாணவர்களுக்கும் இணைய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒன்டாரியோவில் சில பகுதிகளில் மட்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 3ஆம் தேதியன்று மீதமுள்ள பாடசாலைகள் அனைத்தும் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டொரன்டோ மற்றும் யூ பில் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 16 ஆம் தேதி அன்று அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட உள்ளது.

கனடாவின் மற்ற பகுதிகளில் வருகின்ற திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படும் என்று ஒன்டாரியோவின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு முன்னரும் பின்னரும் குழந்தை பராமரிப்பு திட்டங்களும் மீண்டும் அதே தினங்களில் தொடங்கப்படும் என்று இன்றைய அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் ஸ்டீபனின் அறிவித்தலின் பொழுது தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவுகள் அனைத்தும் உள்ளூர் மருத்துவ அதிகாரிகளின் ஒருமித்த ஆதரவை பெற்றது என்பதை கல்வித்துறை அமைச்சர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி விநியோகத்தில் தடைகளா? 

தொற்றின் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கனடா அரசு மாடர்னா மாடர்னா என்ற தடுப்பூசியை விநியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசியை விநியோகிப்பதில் மேலும் இடையூறு என்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏனெனில் மாடர்னா தடுப்பூசி அமெரிக்க மருந்து நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது. அமெரிக்க மருந்து நிறுவன ஒதுக்கீட்டில் 78% மட்டும் அனுப்பி வைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் ஏற்றுமதியை குறைந்துள்ளதால் கனடா அரசு ஒரு லட்சத்து 80 ஆயிரம் தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆகையால் தடுப்பூசி விநியோகிப்பதில் மேலும் இடையூறு வருவதாக மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இருப்பினும் மார்ச் மாதத்திற்குள் 2 மில்லியன் தடுப்பூசிகளை கனடா அரசு பெற்றுக் கொள்ளும் என்று பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் ஊறுகாய் வடிவில் மக்களுக்கு வந்த சிக்கல் – CFIA விடுக்கும் அவசர எச்சரிக்கை!