நுழைவதே சிரமம்! கனடாவில் புதிய அறிவிப்பால் கலக்கத்தில் பன்னாட்டு விமான சேவை நிறுவனங்கள்!

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

டிசம்பர் 30 அன்று கனடா புதிய பயண விதிகளை அறிவித்தது. அதன்படிக் கனேடிய குடிமக்கள் உட்பட அனைத்து பன்னாட்டுப் பயணிகளும் பறப்பதற்கு 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் எனப்படும், கொரோனா சோதனை முடிவுகளை ஆதாரத்துடன்  வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டது.

அதில் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

பன்னாட்டுப் பயணிகள் தாங்கள் எந்த மாகாணத்தில் இறங்கினாலும் அவர்கள் இன்னும் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கனடா பயண விதிகளின் புதிய தொகுப்பு பன்னாட்டு விமான நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்ப்படுத்தி உள்ளது.  பெரும்பாலான உள்வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கொரோனா பரிசோதனை முடிவுக்கான ஆதாரத்தை மட்டுமே வழங்க வேண்டும் என்று இருந்தது.

சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் (ஐஏடிஏ) ஜனவரி 7 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்றது.

கனடா ஏற்கனவே உலகின் மிகக் கடுமையான கொரோனா எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுள்ளது என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா சோதனைக் கொள்கையை பேரழிவுகரமான முறையில் செயல்படுத்துவதன் மூலம் தவறான திசையில் செல்ல எங்களால் முடியாது என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க: கசிந்த தகவல்! கனடாவில் பொதுமுடக்க நேரத்தில் வெளிநாடு பறந்த அரசியல்வாதிகளின் லிஸ்ட்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.