மொராக்கோவுடன் விமான சேவைக்கான தடை நீட்டிப்பு – கனேடிய அரசாங்கம்

Toronto
An almost-empty Terminal 3 is shown at Pearson International Airport in Toronto, Friday, March 13, 2020

மொராக்கோவிற்கான நேரடி விமான சேவைகளுக்கான தடையை அக்டோபர் 29ஆம் தேதி வரை கனடா நீட்டித்துள்ளது. Covid-19 பெரும் தொற்று காரணமாக சர்வதேச நாடுகளுக்கு இடையேயான விமான சேவைகளை கனடா ரத்து செய்து அறிவித்திருந்தது.இந்தியா போன்ற covid-19 தாக்கம் அதிகம் உள்ள நாடுகளிடையேயான விமான போக்குவரத்து தடை செய்திருந்தது.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கனடாவிற்குள் நுழைய தற்சமயம் அனுமதி அளிக்கப்பட்டது.கனடிய அரசாங்கம் மொராக்கோவிற்கான விமான சேவை தடையை முதலில் 30 நாட்கள் பொது சுகாதார நடவடிக்கையாக அறிவித்திருந்தது. செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை நடைமுறையில் இருந்தது

.
மொரோக்கோவில் இருந்து மூன்றாவது நாட்டின் வழியாக கனடாவிற்கு பயணிக்கலாம். பயணிகள் மூன்றாவது நாட்டின் விமான நிலையத்தில் covid-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கனடிய அரசாங்கம் மொராக்கோவிற்கு இடையே விமான சேவைக்கான தடையை நீட்டிக்க அறிவித்துள்ளது.

ArriveCAN செயலி அல்லது இணையதள விண்ணப்ப பக்கத்தில் பயணிகள் தங்களது தனிப்பட்ட மற்றும் பயண தகவலை சமர்ப்பிக்க வேண்டும். கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Covid-19க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றிருக்கும் பயணிகள் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு கனடாவிற்கு பயணம் செய்ய விரும்பினால் அனுமதிக்கப்படும். மேலும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு பெற இயலும்.

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகள் செப்டம்பர் ஏழாம் தேதி கனடாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நுழைந்தவுடன் 14 நாட்களுக்கு பயணிகள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.