பிரிட்டிஷ் கொலம்பியா – காட்டுத்தீ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள்

bc

காலநிலை மாற்றத்தின் காரணமாக தொடர்ந்து இரண்டு தசாப்தங்களாக காட்டுத்தீ அதிக அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீயால் அதிக அளவிலான நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனில் இனி வரும் ஆண்டுகளில் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 13.5 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் 17 ஆண்டுகளில் காட்டுத் தீயினால் எரிந்து பாதிப்படைந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2018 ஆம் ஆண்டு மிக மோசமான காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீயில் 13.5 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலங்கள் எரிந்தன.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ இதைவிடக் குறைவான பாதிப்பை கொண்டு இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஏற்பட்ட காட்டுத் தீயானது சுமார் 8.7 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை எரித்து சாம்பலாக்கியது.

காற்றின் ஈரப்பதத்தை விட VPD அளவு அதிகரிக்கும் போது மண் மற்றும் தாவரங்களிலிருந்து காற்று அதிக அளவு ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்ளும். வறண்ட சூழல் ஏற்படும்போது மரங்களிடையே உராய்வு அதிகரித்து காட்டுத் தீ பற்றி காற்று மூலம் காடு முழுவதும் பரவ தொடங்குகிறது.

68% காலநிலை மாற்றத்தினால் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என்றும், மீதமுள்ளவை இயற்கையான வானிலையில் நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.