BC -யில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் – கிரா ஹோப்மேன்

bc

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ :

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ ஏற்பட்டதற்கான முக்கிய காரணிகளை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். உலகில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் இதன் அடிப்படைக் காரணம் ஆகும். காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் அதிக அளவிலான வெப்பம், வறண்ட காலநிலை போன்றவை பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியை பற்றி எரிய செய்துள்ளது .

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக வனவியல் முனைவர் ஆய்வாளர் கிரா ஹோப்மேன் ,பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலவிவரும் வறண்ட காலநிலை ஆனது வறண்ட மரங்கள் மற்றும் புற்களுக்கு வழிவகுக்கிறது என்று கூறினார். இதற்கு முன்பு ஏற்பட்ட காட்டுத் தீயினால் பாதிப்படைந்த பகுதிகளைவிட இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயினால் எரிந்த பகுதிகள் அதிகம் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீயணைப்பு சேவை தகவல் அதிகாரி கார்லி தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இதுவரை 4 ஆயிரத்து 90 சதுர மீட்டர் எரிந்து பாதிப்படைந்துள்ளது. இது கடந்த ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் காட்டுத்தீயால் பாதிப்படைந்த பகுதியை விட நான்கு மடங்கு அதிகம் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மாகாணத்தில் 257 தீப்பிழம்புகள் எரிந்ததாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. தற்பொழுது 58 வெளியேற்ற உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுமார் 17,500 சொத்துக்கள் வெளியேற்ற எச்சரிக்கையில் உள்ளன. 2018-ஆம் ஆண்டில் 13000 சதுர கிலோமீட்டர் பகுதி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக அளவிலான வெப்பம், மழையின்மை போன்றவற்றால் காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் புற்கள் வறட்சி அடைந்தன. இதன் காரணமாகவே காட்டுத் தீ ஏற்பட்டது என்று ஹோப் மேன் கூறினார்.