கனடாவில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் – மீண்டும் புறப்படுவதற்கு காலவரையின்றி தடை

Toronto
An almost-empty Terminal 3 is shown at Pearson International Airport in Toronto, Friday, March 13, 2020

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக ரஷ்யாவிற்கு பல்வேறு பொருளாதார தடைகளை கனடா அறிவித்துள்ளது. மேலும் கனடிய வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் ஒரு பெரிய ரஷ்ய விமானம் கனடாவின் டொரன்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

விமான நிலையத்திலிருந்து ரஷ்ய விமானம் வெளியேறுவதற்கு காலவரையின்றி தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சரக்கு விமானம் Volga-Dnepr விமான நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கனடாவில் ரஷ்ய விமான ஆபரேட்டர்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி முதல் வான்வெளியை மூடியதால் விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து Anchorage மற்றும் ரஷ்யா வழியாக கனடாவிற்குள் நுழைந்த Antonov An-124 விமானம் டொரண்டோவில் தரையிறங்கிய சில மணி நேரத்திலேயே மீண்டும் புறப்பட இருந்தது. ஆனால் அந்த விமானம் புறப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.தற்பொழுது ஒரு விமானம் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து புறப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

டொரண்டோவில் ரஷ்ய விமானம் தரையிறக்கப்பட்ட தகவலை போக்குவரத்து கனடா அறிந்துள்ளது .போக்குவரத்து கனடா எந்த விமானத்தையும் கைப்பற்றவில்லை எனினும் ,ரஷ்ய விமானம் கனடிய வான்வெளியில் பறக்க முடியாது. விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அத்துமீறி செயல்படும் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம் என்று போக்குவரத்து கனடா தெரிவித்துள்ளது