அமெரிக்காவின் நில எல்லைகள் செப்டம்பர் 21 வரை மூடியிருக்கும் – அமெரிக்கா

america canada border
canada

உலகம் முழுவதிலும் Covid-19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக நாடுகளுக்கு இடையேயான விமான சேவை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. நாடுகளின் எல்லைகளுக்கு இடையே மக்களின் பயணங்கள் தடைசெய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று சில நாடுகளில் கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து கனடாவிற்குள் நுழைய முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது அமெரிக்கா , ஒரு மாத காலத்திற்கு கனடியர்களின் தேவையற்ற பயணங்களுக்காக தனது எல்லைகளை மூடி வைத்துள்ளது. அத்தியாவசியமற்ற பயணக் கட்டுப்பாடுகள் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது

வெள்ளிக்கிழமை காலை ட்விட்டரில் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்தது. அமெரிக்கா அவர்களின் நிலம்,கனடா மற்றும் மெக்சிகோ உடன் படகு செலுத்துதல் போன்றவற்றிற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை தடைகளை நீட்டித்துள்ளது.

அத்தியாவசிய பயணம் மற்றும் வர்த்தகத்துக்கு எல்லை முழுவதும் தொடரும் என்று DHS அறிவித்துள்ளது. Covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளது.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அமெரிக்க குடிமக்கள் கனடாவிற்குள் நுழைய கடந்த மாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி கனடிய அரசாங்கம் தடைகளை நீக்கி எல்லைகளை திறந்தது .அமெரிக்க குடிமக்கள் ஹெல்த் கனடா அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுக் கொண்டனர்.

டெல்டா மாறுபாடு போன்ற தீவிரமான covid-19 வைரஸ் தொற்றுக்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.