ஏர் இந்தியா விமானம் மூலம் கனடாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட சடலம் – பாஜக எம்பி

times of india airindia carried decease bjp mp help

கனடா – டொரன்டோ நகரத்திற்கு அருகில் உள்ள ப்ரூஸ் தீபகற்பத்தில் எட்டு நாட்களுக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் .23 வயதான ராகுல் மகிஜா அவரது நண்பர்களுடன் இணைந்து அக்டோபர் 20-ம் தேதி ப்ரூஸ் தீபகற்ப தேசிய பூங்காவிற்கு சென்றிருந்தார்.பூங்காவின் குன்றிலிருந்து நீர்பரப்பில் ராகுலும் அவரது நண்பர்களும் நேரடியாக குதித்தனர்.

நீர்பரப்பு 15 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் இருந்துது. ராகுல் நீரின் அடிப்பரப்பிற்கு சென்றார்.சில நிமிடங்களுக்கு பின்னரும் ராகுல் மேற்பரப்பிற்கு வராததால் அவரது நண்பர்கள் அவரது உடலை நீரிலிருந்து மீட்டெடுத்தனர்.உள்ளூர் காவலர்களுடன் இணைந்து ராகுலை உயிர்ப்பிக்க முயற்ச்சி செய்தும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

கனடாவின் ஸ்கார்பரோவில் தங்கியிருந்த ராகுல் மிகவும் சுறுசுறுப்பானவர் மற்றும் BBA மாணவர் சங்கத்தின் தலைவர் என்றும் அவரது பள்ளித் தோழியான ருச்சா தெரிவித்து உள்ளார்.

ராகுலின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு பாஜக கட்சியின் எம்பி ரஞ்சன் பட் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் மூலம் ராகுலின் உடல் வெள்ளிக்கிழமை குஜராத்திற்கு கொண்டு வரப்பட்டது

“ராகுல் குளிர்ச்சியான நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளார். Seneca கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை முடித்த ராகுல் மேலும் மற்றொரு படிப்பை படிப்பதற்கு திட்டமிட்டிருந்தார் என்று பரோடாவில் உள்ள பழைய நகரில் சொந்தமாக புடவை கடை நடத்தி வந்த ராகுலின் தந்தையிடம், ராகுல் உடலை பரிசோதனை செய்த ஜார்ஜ் ஹர்போர் கூறினார்.