டெல்லியிலிருந்து மட்டுமே கனடாவிற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன – ஏர் கனடா

Air-India-787-Dreamlin

கனடிய அரசாங்கம் இந்தியாவுடனான நேரடி விமான சேவைகளுக்கு கடந்த மாத இறுதியில் அனுமதி அளித்திருந்தது. மேலும் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு வரும் பயணிகள் முறையான covid-19 பரிசோதனை முடிவுகள் மற்றும் கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து ஆதாரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தது .

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஜென்ஸ்ட்ரிங்ஸ் டயக்னாஸ்டிக் சோதனை மையம் கனடாவிற்கு செல்லும் பயணிகளுக்கு ஒரே covid-19 பரிசோதனை செய்யும் வசதி கனடிய அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது .

கனடாவிற்கு புறப்படுவதற்கு முன்பு ஜென்ஸ்ட்ரிங் சோதனை மையத்தில் எதிர்மறை முடிவுகளை பெற்றிருக்க வேண்டும் என்று கனேடிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பயணிகள் புறப்படுவதற்கு 18 மணி நேரத்துக்கு முன்பு சோதனையை செய்திருக்க வேண்டும். சோதனை முடிவுகள் QR குறியீட்டுடன் வழங்கப்படும். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஆய்வகத்தில் QR குறியீட்டுடன் வழங்கப்பட்ட சோதனை முடிவுகளை காட்ட வேண்டும்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தினசரி ஏர் கனடா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. கடந்த மாதம் செப்டம்பர் 27-ஆம் தேதி இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைகளுக்கு கனடா அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.கனடாவிற்கு செல்வதற்கான விமானங்கள் தலைநகர் டெல்லியில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் மெட்ரோ நிலையத்திற்கு மேலே உள்ள இடத்தில் ஜெண்ட்ஸ்ரிங் சோதனை மையம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜெண்ட்ஸ்ரிங் ஆய்வகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர், டாக்டர். கௌரி அகர்வால் கனடிய சுகாதார அமைப்பு எங்கள் ஆய்வகத்தின் தரத்தை உறுதி செய்து காட்டிய நம்பிக்கை பெருமை அளிப்பதாக கூறினார்