17 வருடங்களாக காணாமல்போன மேரி – காவல்துறை வெளியிட்டுள்ள புகைப்படம்

toronto police

2019 ஆம் ஆண்டு ஆன்னெ மேரி என்ற பெண் காணாமல் போனதாக அவளது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.இறுதியாக மேரி 2004 ஆம் ஆண்டு தனது குடும்பத்தோடு தொடர்பில் இருந்துள்ளார். கிரேட்டர் டொரன்டோ பகுதிக்கு அடிக்கடி சென்று வரும் பழக்கங்கள் கொண்ட மேரி 2004 ஆம் ஆண்டு காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பீட்டர் பாரோ அல்லது பக்ஹார்ன் பகுதியில் மேரி சிகை அலங்கார நிபுணராக பணிபுரிந்து இருக்கலாமென்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேரி தொலைந்து 17 வருடங்கள் கடந்துவிட்டது. தற்பொழுது காணாமல்போன மேரியை எளிதாக அடையாளம் காணுவதற்கு காவல்துறையினர் மேரியை போன்ற கலப்பு ஓவியங்களை உருவாக்கி வழக்கிற்கு புதிய தடயங்கள் வெளியிட்டுள்ளனர் .

2004ஆம் ஆண்டு காணாமல் போன மேரியை கண்டுபிடிப்பதற்கு 2019 ஆம் ஆண்டு அவரது குடும்பம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். டொரன்டோ காவல்துறையினரிடம் புகார் அளிப்பதற்கு முன்பே மேரியின் குடும்பத்தினர்கள் கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் போன ஆன் மேரிக்கு தற்பொழுது 62 வயது நிறைவடைந்து இருக்கும். 110 பவுண்டுகள் எடை உள்ள மேரி சிவப்பு நிறமாக இருப்பார் என்றும் வெளியிடப்பட்டுள்ளது. பொன் நிறத்தில் முடி, துளைகள் கொண்ட காதுகள், வெளிர் பச்சை நிறம் கொண்ட கண்கள் மற்றும் இரண்டு மொழிகள் தெரிந்தவர் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மேரியின் புகைப்படங்களையும் ,தற்பொழுது மேரி எப்படி உள்ளார் என்ற புகைப்படங்களையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். புலன் விசாரணையாளர்கள் மற்றும் காவல்துறையினர் மேரியின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் ,மேரியை பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை அழைக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம்  கான்ஸ்டபிள் கேனன் தெரிவித்தார்.