கனடாவின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம் பயனர்களிடம் மன்னிப்பு!

rogers
Rogers wireless service back for majority of users following outage

கனடாவின் பல்வேறு கனடியர்கள் உபயோகித்து வரும் தொலைத்தொடர்பு வலையமைப்பு ரோஜர்ஸ் ஆகும்.

இந்த பிரபல ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தமது வலையமைப்பு பயனர்களிடம் மன்னிப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணைய அமைப்பு திடீரென செயல் இழந்ததன் காரணமாக மன்னிப்பு கேட்டுள்ளது.

சில மணி நேரங்கள் ரோஜஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணைப்பு அமைப்பில் சில சிக்கல்கள் தென் பட்டதோடு அதன் பின்னர் முற்றிலுமாக இணைய அமைப்பு செயலிழந்து விட்டது.

திடீரென்று ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பயனாளர்கள் சிக்கல்களுக்கு ஆளாகினர்.

இதனைத் தொடர்ந்து தனது பயனாளர்கள் இடையே ரோஜர்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் இணைய அமைப்பு பக்கத்தில் மென்பொருள் மாற்றுகையில் இந்த தொழில்நுட்ப பிழை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனோடு தனது அறிவிப்பில் தொழில்நுட்ப பிழை சரி செய்ய விரிவான பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

திடீரென வலையமைப்பு முடங்கியதால் பல்வேறு பயனர்கள் உபயோகிக்க முடியாமல் சிக்கலில் இருக்கின்றனர். பயனர்களுக்கான சேவையை வழங்குவதில் ரோஜர்ஸ் நிறுவனம் தாமதம் காட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சேவையை தொடர்ந்து சிறப்பாகவும் சீராகவும் பயனர்களுக்கு வழங்க கடினமான உழைப்பினை ரோஜர்ஸ் நிறுவனம் அயராது முதலீடு செய்யும் என்பது உறுதியான முன்மொழிவு ஆகுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது