கனடா வங்கி செய்துள்ள புதிய தீர்மானங்களில் புதுப்பிக்கப்படும் வட்டி விகிதம்

Bank of Canada
Bank of Canada will hold current level of policy rate until inflation objective is achieved, continues quantitative easing

Covid-19 வைரஸ் தொற்று நோயினால் கனடாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை சீர் செய்து மேம்படுத்துவதற்கு வட்டி வீத அறிவிப்பை புதுப்பிக்க உள்ளதாக கனடா வங்கி அறிவித்துள்ளது.

 

கனடா தனது சமீபத்திய வட்டி விகித அறிவிப்பை வெளியிடுவதால் ,நாட்டிற்கான பொருளாதார கண்ணோட்டத்தை குறித்து இன்று காலை அறிவிக்கும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய வங்கியின் கண்ணோட்டத்திலிருந்து முதல் காலாண்டில் வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்கள் அதன் கணிப்புக்கு கீழே வந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் எதிர்பார்ப்புகள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 

 

கடந்த வருடம் covid-19 வைரஸ் தொற்று நோய் தீவிரமாக பரவ தொடங்கியதிலிருந்து வங்கி அதன் முக்கிய கொள்கைகளின் சதவீதத்தை 0.25 சதவீதமாக வைத்திருப்பதால், இந்த கோடையில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக முன்னேற வேண்டும் என்று சென்ற மாதம் மத்திய வங்கி அறிவித்தது.

 

 

சி ஐ பி சி -இன் முதன்மை பொருளாதார வல்லுநர் அவெரி செண்பெல்ட் ,” மத்திய வங்கி பொருளாதார கண்ணோட்டத்தில் மாற்றங்களைச் செய்யாது, ஆனால் அதன் பணவீக்கத்தை சீர்செய்து மேம்படுத்த வேண்டி இருக்கும் “என்று கூறினார்.

 

 

சி டி ஹோவ் நிறுவனத்தின் நாணயக் கொள்கை கவுன்சில் வங்கி அதன் முக்கிய வீதத்தை 0.25 சதவீதமாக வைத்திருக்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் கூட்டாட்சி பத்திர கொள்முதல் வாரத்திற்கு 3 பில்லியன் டாலர் என்ற இலக்கு கொண்ட மத்திய வங்கி அளவை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் குழு பரிந்துரை செய்துள்ளது.