CanSino Biologics : சீனாவின் செயலால் ஆத்திரத்தில் கனடா! கடைசி நேரத்தில் காலை வாரிவிட்ட சம்பவம்!

Justin Trudeau
canada says PM Justin Trudeau

CanSino Biologics : சீன நிறுவனத்திடமிருந்து கொரோனா மருந்துகள் கப்பல் மூலம் அனுப்பப்படுவதை பெய்ஜிங் நிர்வாகம் தடுத்தது.

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிக்கான முதல் முன்மொழியப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை கைவிட  வேண்டிய நிலைக்கு கனடா தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனேடிய அரசாங்கம் இப்போது இரண்டு அமெரிக்க மருந்து நிறுவனங்களிடம் கொரோனா மருந்து வேண்டி கோரிக்கை முன்வைத்துள்ளது.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக, மருந்து தயாரிக்க சாத்தியமான நிறுவனங்களிடம்  சுமார் 114 மில்லியன் அளவுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

கனடாவின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சீனாவின் தியான்ஜின் தலைமையிடமாகக் கொண்ட கன்சினோ பயோலாஜிக்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் போடப்பட்டு கொரோனா மருந்து தயாரிக்க இருப்பதாக மே மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து கனடாவிற்கு செல்ல வேண்டிய கேன்சினோ கொரோனா தடுப்பு மருந்து கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

கேன்சினோ நிறுவனத்தின் கொரோனா வேக்சினை ஏற்றுமதி செய்ய வேண்டிய கடைசி நொடியில் அதை சீனாவின் அரசுக்கு தடுத்து நிறுத்தி இருக்கிறது. கேன்சினோ தடுப்பு மருந்து கனடாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஆகும்.

கேன்சினோ வேக்சினுக்கு Ad5-nCoV என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கனடாவின் தொழில்நுட்பத்தில் சீனாவில் உருவாக்கப்பட்டது.

இதற்காக கனடாவின் மத்திய நோய் ஆராய்ச்சி மையமும் கேன்சினோ நிறுவனமும் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.

இந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை கனடாவில் நடக்கும். மருந்தின் உரிமையில் 50% கனடாவிற்கு கொடுக்கப்படும் என்ற ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், அது மீறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: Drugs Canada : உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்! கனடாவில் பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.