கனடா பொருளாதார நிபுணர்களின் திடீர் எச்சரிக்கை! மக்கள் எதிர்கொள்ளப்போகும் வங்கி நடவடிக்கை!

Bank of Canada
Bank of Canada will hold current level of policy rate until inflation objective is achieved, continues quantitative easing

விரைவில் மக்கள் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக கனடிய வங்கிகள் தமது வட்டி வீதத்தை அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொது முடக்கம் அமலில் இருந்த காலத்தில்கூட, கனடாவின் பண்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளின் பெறுமதி (GDP) எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்திருப்பதனால், கனடா வங்கிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக  கனடாவின் பெரிய வங்கிகளின் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பண்டங்களினதும் சேவைகளினதும் பெறுமதி அதிகரிக்கும்போது மக்களின் பணத் தேவைகள் (demand) அதிகரிப்பதால் அதை வழங்கும் (supply) நிதி நிறுவனங்கள் தமது பண வழங்கலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தைக் கிட்டத்தட்ட பூச்சியத்துக்குக் கிட்டே வைத்திருந்தது. பொருளாதார இறுக்கம் 2023 வரை நீடிக்கலாம் என அது அஞ்சியது.

ஆனால் 2020 இன் கடைசிக் காலாண்டில் GDP எதிர்பாராத அளவுக்கு முன்னேறியிருந்தது. இதன் காரணமாக விரைவில் வட்டி வீதத்தை அதிகரிக்க மத்திய வங்கி முடிவெடுக்கும் என  நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொருளாதாரத்தைச் சிரமமின்றி நகர்த்துவதற்காக, கடந்த வருடம் மார்ச் முதல் கனடிய மத்திய வங்கி தனது ‘வட்டி வீதத்தை’ 0.25% ஆக வைத்துக்கொண்டிருக்கிறது.

கனடிய வங்கியிலிருந்து இதர நிதி நிறுவனங்கள்  வட்டிக்குப் பணம் பெறும் வீதத்தை overnight lending rate என்பார்கள்.

வர்த்தக வங்கிகள் இப்படிக் குறைந்த வட்டிக்குப் பெற்ற பணத்தை குறைந்தது 2% அதிகமாக வைத்துத் தமது வாடிக்கையாளருக்கு வழங்குகின்றன.

கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் நிவர்த்தி செய்யப்படும்வரை மத்திய வங்கி தனது நாள் வட்டியை அதிகாரிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறது.

தற்போதைய பொது முடக்கங்கள் மேலும் பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்பதனால் 2023 வரை பொருளாதாரம் புத்துயிர் பெறும் என அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் எதிர்பார்த்ததைவிட பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கைப்படி, கடந்த காலாண்டின் வளர்ச்சி 8 சதவீதத்தைத் தாண்டியிருந்தது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு 4.8 சதவீதமாகும்.

இதையும் படியுங்க: 96 சதவிகித கனேடிய மக்கள் கொரோனா காலத்தில் இந்த தவறை செய்தனர் – புள்ளிவிவர கனடா அம்பலப்படுத்திய உண்மை!