சீனாவுக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் – மேற்கத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Justin Trudeau
canada says PM Justin Trudeau

கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இரண்டு மைக்கேல்ஸ் விவகாரத்தை தொடர்ந்து வர்த்தகம் போன்றவற்றில் மறைமுகமாக மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மேற்கத்திய நாடுகளுடன் தொடர்ந்து ஆட்டம் காட்டும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் துன்புறுத்தும் ராஜதந்திரத்திற்கு எதிராக ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஐக்கிய முன்னணியை காட்ட வேண்டும் என்றும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்

சீனா பல கோணங்களில் மேற்கத்திய நாடுகளுடன் ஆடும் ஆட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கத்திய நாடுகள் வலுவாக ஒருங்கிணைந்து முன்னோக்கி செயல்பட வேண்டுமென்று கூறினார். தற்போது சீனா வர்த்தக போரில் கனடா உடன் விளையாடி வருகிறது.சீனா தந்திரமாக மேற்கத்திய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொள்வதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

கடந்த சில வருடங்களாக கனடாவை எதிர்த்து சீனா செயல்படுவதால் நாடுகளுக்கிடையேயான சுமூகமான உறவுகள் சிதைந்து உள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய பிரச்சனை நீடித்து வருகிறது.

சீனாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டதால் கனடா ஆழ்ந்த கவலையில் உள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் 2022 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தூதரக அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என்று கனடா தெரிவித்துள்ளது.