பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் வாக்குறுதி என்ன ஆனது? – கனடா முழுவதும் 8.5 மில்லியன் மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டுள்ளன

Immigrant Agricultural Workers Critical To U.S. Food Security Amid COVID-19 Outbreak
GREENFIELD, CA - APRIL

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கனடா முழுவதும் மரக்கன்றுகளை நடுவதாக உறுதி அளித்து இருந்தார். எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் நடப்படும் என்று உறுதியளித்திருந்த 2 பில்லியன் மரக்கன்றுகளில் அரை சதவீதத்திற்கும் குறைவான மரக்கன்றுகளை அரசாங்கம் நட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல் கோரிக்கையின் மூலம் பெறப்பட்ட புள்ளிவிவரங்களில் 8.5 மில்லியன் மரக்கன்றுகள் நவம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் நடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது லிபரல் கட்சியினர் வாக்குறுதி கொடுத்ததில் 0.4% சதவீதத்திற்கும் மேலானது என்று கூறப்படுகிறது.

ஏறத்தாழ 4,300 புதிய வேலைகளை உருவாக்கும் அதே வேளையில் கனடாவின் காலநிலையை மாற்றுவதற்கு 2 பில்லியன் மரக்கன்றுகளை நட்டு வைப்பது சிறந்த வழிமுறை என்று வலியுறுத்துகிறது. கனடாவின் இயற்கை வள அமைச்சகம் “மரக்கன்றுகளை நட்டு வைப்பதில் மந்தமான தொடக்கம் இருந்தபோதிலும் திட்டத்தில் பின்னடைவு ஏற்படவில்லை ” என்று கூறியது.

கனடாவின் இயற்கை வளங்களை சேர்ந்த ஜோனா சிவசங்கரன் ” மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து அதிகரிக்கும் இதன் பயனாக இந்த ஆண்டு இறுதிக்குள் 30 மில்லியன் மரக்கன்றுகள் நடப்படும் ” என்று கூறினார்.30 மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு பங்களிப்பாளர்கள் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி அளித்ததிலிருந்து ஏறத்தாழ 7.6 மில்லியன் மரங்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்தன. சஸ்கெட்ச்வானில் 60,400 ,ஒன்ராறியோவில் 89.000 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.