கனடிய வரிப்பணத்தை முழுவதுமாக வீணடிக்கும் செயல் – தென் ஆப்பிரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பிய பயணியின் சிக்கல்

traveller from southafrica

ஓமிக்ரோன் வைரஸ் மாறுபாடு அச்சுறுத்தல் காரணமாக கனடிய அரசாங்கம் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடை அறிவித்திருந்தது. சமீபத்தில் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றிருந்த கனடிய ஹாக்கி வீராங்கனைகள் 9 பேர் கனேடிய அரசாங்கம் அறிவித்திருந்த தடை காரணமாக கனடாவிற்கு மீண்டும் திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர். பின்னர் கனடிய அணி வீராங்கனைகளுக்கு கனடாவின் மத்திய அரசாங்கம் விலக்கு அளித்திருந்தது .

தென்னாப்பிரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பிய பல கனடியர்கள் எதிர்மறையான covid-19 சோதனை முடிவுகளை பெற்றிருந்தாலும் கனடிய அரசாங்கத்தால் நிதி அளிக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் கூடுதலாக 36 மணி நேரம் வரை தங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கனடியர்களை இவ்வாறு நடத்துவது சங்கடமான சூழலை ஏற்படுத்துவதாகவும் மேலும் கனடிய அரசாங்கத்தின் வரிப்பணத்தை முழுவதுமாக வீணடிப்பதாகவும் சைமன் டிராக் லேண்ட் என்பவர் கூறினார். தொலைக்காட்சி தயாரிப்பாளரான ட்ராக் லேண்ட் பணி நிமித்தமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி டொரன்டோவிற்கு பயணம் செய்து விடுதியில் தனிமைப் படுத்தப் பட்டார். அடுத்தநாள் எதிர்மறையான Covid-19 சோதனை முடிவை பெற்றார்.

விடுதியில் இருந்து அவரை விடுவிப்பதற்கு அரசாங்க அதிகாரி ஒருவர் ஒப்புதல் அளிக்கும் வரை 36 மணி நேரம் விடுதியில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினார்

. இவ்வாறு கனடிய பயணிகளின் தனிமைப்படுத்தல் அனுபவங்கள் உண்மையில் மிகவும் சிக்கலானது. PHAC அதிகாரி எதிர்மறை சோதனை முடிவு பெற்றுள்ள பயணிகளின் விடுதலைக்கு ஒப்புதல் அளிப்பதற்கு 48 மணி நேரம் கூட ஆகலாம் என்றும் ஒப்புதல் இல்லாமல் விடுதியை விட்டு வெளியேறுபவர்களுக்கு 5000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.