இப்போது இருக்கும் சூழலில் இந்தியாவை விட கனடா பாதுகாப்பானது – நடிகர் விஜய் மகனுக்கு சென்ற அறிவுரை!

vijay
Tamil actor vijay and his son

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட தயாரிப்பு பட்டப் படிப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக, இந்தியா திரும்பாமல் கனடாவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் 23 ஆம் தேதியில் இருந்து இந்தியாவுக்கான சர்வதேச விமான சேவை இரத்து செய்யப்பட்டது.

விமானங்கள் இல்லாததால் மகனை அழைத்துவர முடியாமல் விஜய்- சங்கீதா தம்பதியினர் தவித்து வந்த நிலையில், தற்போது கனடா – இந்தியாவுக்கு இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.

இருந்தாலும் கூட விஜய் மகன் சஞ்சய் இன்னமும் இந்தியா திரும்பவில்லை. மே மாதமே டொராண்டோ, வான்கவர் விமான நிலையங்களில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இதன் பின் ஜூன் 9 முதல் ஜூன் 30 வரை கனடாவில் இருந்து இந்தியாவுக்கு 26 சிறப்பு விமானங்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டன.

விஜய்யின் மனைவி சங்கீதாவோ இப்போது மகன் இந்தியாவுக்கு வருவதில் இருக்கும் சிக்கல்களை விஜய்யிடம் பட்டியலிட்டிருக்கிறார். சஞ்சய் தங்கும் இடத்தில் இருந்து விமான நிலையம் செல்ல வேண்டும்.

அங்கிருந்து இந்தியா வர சுமார் இருபது மணி நேரம், அந்த பயண நேரத்தில் யாரிடமிருந்தும் தொற்று பரவாமல் இருக்க வேண்டும்.

பின் இந்தியா வந்தால் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல், 7 நாட்கள் அரசு சொல்லும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பின் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக சென்னை மாநகராட்சி வீட்டில் அறிவிப்பு வைக்கும்.

அது அரசியலாகக்கூட ஆகலாம் என்பதுவரையிலான சிக்கல்களை ஆலோசித்த விஜயும், சங்கீதாவும் இப்போதைக்கு தங்கள் மகன் சென்னை வர வேண்டாம், ஆரோக்கியமே முக்கியம் என்று முடிவெடுத்தனர். அதனால், அங்கேயே இரு என்று சொல்லிவிட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms