கனடாவில் வேலை தேடும் மக்களுக்கு எச்சரிக்கை! டொராண்டோ விமான நிலைய வேலை பெயரில் மாபெரும் மோசடி!

Toronto
An almost-empty Terminal 3 is shown at Pearson International Airport in Toronto, Friday, March 13, 2020

கனடாவிலுள்ள மிகப்பெரிய டொரன்டோ பியார்சன் பன்னாட்டு விமான நிலையத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக போலியான விளம்பரங்களை அறிவித்து வேலை தேடி வருபவர்களிடம் கணிசமான பணத்தினைப் பெற்று மோசடி செய்து வருவதாக விமான துறைக்கு தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த போலியான வேலைவாய்ப்பினை யாரும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு விமானத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று விமானத்துறை அதிகாரிகள் டொரண்டோவில் உள்ள பேர்சன் பன்னாட்டு விமான நிலையத்தில் இந்த போலியான வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி செய்யும் கும்பல் விமான நிலையத்தில் மின்னியல் பொறியாளர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு அலுவலர் போன்ற பணிகளுக்கும் காலியிடங்களை நிரப்ப வேலையாட்கள் எடுப்பதாக மோசடி செய்து வருவதை கூறி எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவித்தனர்.

மேலும் கிடைக்கப்பட்ட தகவல்களில் பதவி மாற்றம் செய்து கொள்வதற்கு நிறைய பணம் கேட்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் மக்களுக்கு மோசடி கும்பலை கண்டுபிடிக்கும் விதமாக விமானத் துறையில் வேலைவாய்ப்பு என்று

விளம்பரப்படுத்தப்படும் இணையதளம் முகவரியை நன்றாக பரிசோதிக்கவும் மேலும் அதன் எழுத்துக்களை சரியாக படித்து பார்க்கவும் ஆலோசனை கூறியுள்ளனர்.

உண்மையான விமான துறைக்கும் மோசடி கும்பலுக்கும் உள்ள வித்தியாசத்தை இதன்மூலம் கண்டறியலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.