தடுப்பூசி போடாதவர்கள் நூறு டாலருக்கு குறையாமல் வரி செலுத்த வேண்டும் – அதிரடி காட்டும் கியூபெக் மாகாண முதல்வர்

legault qubec canada province premiere

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருவதை தொடர்ந்து மாகாண அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன.சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாகாண அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட கியூபெக் மாகாணம் ,covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. கியூபெக் மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து அளவுகளை போட்டுக் கொள்ள மறுக்கும் பெரியவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வரியாக வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து அளவுகளை போடாத நபர்கள் மற்றவர் மீது நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றனர். Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்து போடாத குடியிருப்பாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க தொகையை வரியாக வசூல் செய்ய மாகாண நிதி அமைச்சகம் நிர்ணயிக்க உள்ளது.

தடுப்பூசி போடாதவர்கள் இடமிருந்து வசூல் செய்யப்படும் வரித் தொகை 100 கனேடிய டாலருக்கு குறைவாக இருக்காது என்றும் கியூபெக் மாகாணத்தின் முதல்வர் பிரான்கோயிஸ் லெகால்ட் தெரிவித்தார். மேலும் பிற மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி மருந்துகளிலிருந்து விலக்கு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி மருந்து போடாதவர்கள் ஆவர்.கியூபெக் மாகாணத்தில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி மருந்துகள் போடாதவர்கள் என்று முதல்வர் பிரான்கோயிஸ் தெரிவித்தார்.