ஒன்ராரியோ மாகாணம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் சாத்தியம்!

doug_ford
After new modelling data showed the current wave could continue into summer if nothing changes

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஒன்ராரியோ மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து covid-19 வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை தினசரி குறைந்து வருவதாகபதிவுகள் கூறுகின்றன.

மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துகொண்டே இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 1616 covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த வாரங்களில் பதிவாகியுள்ள தொற்று எண்ணிக்கையைவிட 500 எண்ணிக்கை குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்ராரியோ மாகாணத்தில் திங்கட்கிழமை 2170, ஞாயிற்றுக்கிழமை 2199 என covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் ஏழு நாட்களில் பதிவாகியுள்ள வைரஸ் தொற்று பரவலின் சராசரி எண்ணிக்கையானது 2287 ஆக குறைந்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இதனை அடுத்து வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலையானது எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது ஒன்ராரியோ மாகாணத்தில் 24 ஆயிரத்து 966 புதிய covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒண்டாரியோ மாகாணத்தில் 31151 வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஒன்ராரியோ மாகாணத்தில் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் சாத்தியக் கூறுகள் நிலவி வருவதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. மாகாணம் முழுவதும் தற்பொழுது வரை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.