பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – கனடிய ராணுவ படைகள் சஸ்கெச்சுவானுக்கு அனுப்பப்படுவார்கள்

Canada-Coronavirus-Update

சஸ்கெச்சுவானில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலைக்கு எதிராக போராடுவதற்கு கனடிய ஆயுதப்படைகள் அனுப்பப்படும் என்று பாதுகாப்பு மற்றும் அவசரநிலை துறை அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.

சஸ்கெச்சுவானின் நிலைமை குறித்த விவரங்கள் இன்னும் நிறைய தெரிவிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மத்திய அரசாங்கம் சஸ்கெச்சுவான் மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான கூட்டாட்சியின் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று பில் பிளேர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கனடாவின் Red Cross பணியாளர்களை கூடுதலாக சஸ்கெச்சுவான் பகுதிக்கு அனுப்புவதற்கு மாகாண அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

கனடிய ராணுவப்படை உறுப்பினர்கள் சஸ்கெச்சுவான் மக்களுக்கு உதவுவதற்காக விரைவில் அனுப்பப்படுவார்கள் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஸ்கெச்சுவானின் பொது சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கனேடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் கேத்தரின் ஸ்மார்ட் சஸ்கெச்சுவானின் நிலைமை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். சஸ்கெச்சுவானின் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மூன்று நாட்களுக்குள் ஒன்டாரியோ மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் .

Covid-19 வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சுகாதார பாதுகாப்பு முறைகளை மூழ்கடிப்பதாக அமைகிறது என்று சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.